என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

அன்னதானம்

இந்தக்கூடம் அருட்கூடம் என பெயர் இடப்பெற்றுள்ளது. நமது பகவானின் ஒப்பற்ற கருணையினால் இக்கூடத்தில் பக்தர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. சமையல் அறை மற்றும் உணவு பொருட்களை பாதுகாக்கும் கிடங்கு இக்கூடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பக்தர்களுக்காக வழங்கப்படுகின்றது.

இக்கூடமாக மாற்றபடுவதற்கு முன்பு, குரு பகவான் அவர்கள் பக்தகோடிகளுக்கு மிக அதிக நேரம் இங்கிருந்துதான் தரிசனம் கொடுத்தார்.