என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

நாம சங்கீர்த்தனம் மற்றும் நிகழ்ச்சி நிரல்.

பகவானின் நாமசங்கீர்த்தனம் மகிமை பற்றியும் நம்மை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு செல்ல நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது எனவும் அறிவுறுத்தி உள்ளார்கள். காலை 6மணி முதல் மாலை 6மணி வரை தொடர்ச்சியாக நாம பாராயணம் நடை பெறுகிறது. பகவானின் சொல் படி நாம் ஒரு முறை யோகி ராம்சுரத்குமார் (இது இந்த பிச்சைக்காரனின் பெயர் அல்ல, தந்தையின் பெயர்) உச்சரிக்கும் போது 5 முறை ராம மந்திரத்தை பாராயணம் செய்வதற்கு சமமான பலனை கொடுப்பதாக பகவான் உணர்த்தி உள்ளார்கள். இந்த கூடத்தில் நமது பகவான், அவர் தம் குரு, மற்றும் அவரது பொன் மொழிகளை தாங்கிய சித்திரங்கள் உள்ளன.