என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

சாது போஜனம் (அ) சாதுக்கள் உணவகம்

சாது போஜன அறையில் யோகியின் தரிசனம்.

இந்த உயர்த்தப்பட்ட மேடையானது மேற்கூரையினால் வேயப்பட்டுள்ளது. பகவானின் அறிவுரைப்படி 1999ஆம் வருடம் இப்பணி பகவானின் பக்தர் ஒருவரால் தொடங்கப்பட்டது. பகவானின் திருவுளப்படியே இவ்விடம் மேலே கூரையினால் வேயப்பட்ட அமைப்பிலேயே எப்போதும் இருக்கும்.

உள்ளூர் சாதுக்கள் மற்றும் வெளியூரிலிருந்து பயணம் மேற்கொண்டு வரும் சாதுக்களுக்கு மூன்று வேளை அரிசி காய் வகைகள் மற்றும் பழ வகைகளால் ஆன உணவு பணிவுடன் அளிக்கப்பட வேண்டும் என பகவான் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இவ்வாறு வரும் சாதுக்களுக்கு உணவு பரிமாறி பணிவிடைகள் ஆற்றி விருந்தோம்பல்கள் செய்வித்து, அவர்களை நமஸ்கரித்து வழியனுப்ப வேண்டும். அவர்கள் மன நிறைவுடன் வழங்கும் ஆசிர்வாதங்கள் மூலமாகத்தான் இவ்விடம் ஒரு உண்மையான ஆசிரமமாக மாற முடியும் என்பதே நமது யோகியாரின் கருத்து.