என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

வெள்ளி ரதம்

பிரதான ஆலயத்தின் எதிர்ப்புறம், நீங்கள் ஒரு வாயிற்கதவுடன் கூடிய ஒரு கட்டிடத்தைக் காண இயலும். ஜூன் 2004ல் நடந்த மஹா சமாதி ஸ்தல கும்பாபிஷேகத்தின் போது பக்தர் காணிக்கையாக அளித்த வெள்ளிரதம் இங்கே தான் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.விழாக் காலங்களிலும் மற்றும் பக்தர்களின் விஷேச சேவை நேரங்களிலும் பகவானின் உத்சவமூர்த்தி , இந்த வெள்ளி இரதத்தில் கிரிவலம் செல்லும் பாதையில், நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க பகவானின் திவ்ய நாம உச்சரிப்போடு ஊர்வலம் எடுத்து செல்லப் படும்.