என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

வேதப் பாடசாலை ஆசிரமத்தின் ஹிருதயமாக திகழ்கிறது.

நம் வேதப் பாட சாலையில், வேதாகம பண்டிதர்களைக் கொண்டு வேதம் பயிற்றுவிக்க ஏற்பாடு நடைப்பெற்று வருகின்றது.

தற்போது ஒரு பச்சை நிற சலவைக்கல்லினால் செய்யப்பட்ட பகவானின் சிலை வேத பாடசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

இந்த சிலையானது, இத்தாலி நாட்டைச்சேர்ந்த பகவானை நேரிலேயே பார்க்காத ஒரு சிற்பியால் வடிவமைக்கப்பட்டது மிகவும் விஷேசமாகும்.

அந்த சிற்பக்கலை நிபுணர் பகவானின் புகைப்படத்தினை மட்டுமே சிற்பத்தை பார்த்து செதுக்கியுள்ளார்

பக்தர்கள் பகவானின் சிலையை காலை 9 மணி முதல் 10 மணி வரை , மற்றும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை தரிசனம் செய்யலாம், இங்குள்ள நூலகத்தில் வேத ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிஞர்களுக்கு உதவும் வகையில் நிறையப் புத்தகங்கள் உள்ளன,ஆசிய கலாச்சாரத்திற்கென யோகி ராம்சுரத்குமார் ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அவ்வப்போது இராமாயணம், சம்ஸ்கிருத மொழியின் சிறப்புகள், பாரத நாட்டின் ஜீவன் முக்தி அடைந்த ஞானிகள் பற்றியும், மற்றும் இந்திய கலாச்சாரங்கள் பற்றிய கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. வேதங்கள் பற்றிய யோகியின் கருத்து - “ வேதங்கள் இல்லையெனில் உலகம் அழிவுப்பாதையில் செல்லத் தொடங்கும்.’’காஞ்சி மஹாபெரியவா ஸ்வாமிகளால் பாதுகாக்கபட்ட வேதங்களை பொக்கிஷமாக பேணி காப்பதே நாம் மஹாஸ்வாமி அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடனாகும். ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைகழகமும் , ஆசிய கலாச்சாரத்திற்கான யோகி ராம்சுரத்குமார் ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணந்து மேற்கொண்ட ஆய்வு பணிகள் மூலமாக வேதங்கள் மற்றும் வேத கால முனிவர்கள் ஆகிய பொருட்களில் பற்பல ஆராய்ச்சிகள் தொடங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. அதன் வகையில் இப்போது, முதன் முறையாக, ரிக்வேத பாடசாலை, 7 மாணவர்களுடன் திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டுள்ளது.