என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

இளம் பிராய வாழ்க்கை

Yogi ramsurthkumar his Early Life

பகவான் யோகிராம்சுரத்குமார் 1918ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கங்கைகரையில் உள்ள நார்தரா எனும் சிறிய கிராமத்திலே அவதரித்தார். சின்னஞ்சிறு வயதில் இருந்தே கங்கையின் மீது விவரிக்க முடியாத பற்றுதலும் பாசமும் வைத்திருந்தார் நமது பகவான்.

நார்தராவில் யோகியின் இல்லம்.

His house at nardara

பகவான் யோகிராம்சுரத்குமார் 1918ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கங்கைகரையில் உள்ள நார்தரா எனும் சிறிய கிராமத்திலே அவதரித்தார். சின்னஞ்சிறு வயதில் இருந்தே கங்கையின் மீது விவரிக்க முடியாத பற்றுதலும் பாசமும் வைத்திருந்தார் நமது பகவான்.

கங்கைக்கரை அருகில் உலவி திரிந்து கொண்டிருக்கும் சாது சன்னியாசிகளுடன் நமது யோகியார் ஏற்படுத்தி கொண்ட நட்பும், இந்த அருட்தொண்டர்களுடன் நடந்த உரையாடல் மூலம் கிடைக்க பெற்ற அனுபவங்களும், பின்னாளில், நமது பகவானின் வாழ்க்கை பயணத்தை, ஆன்மீக பாதையில் தொடர வைக்கும் காரணியாக அமைந்தது.

அவர் படித்த பள்ளிக்கூடம்.

School of Yogi Ramsurthkumar

தன் மனதில் அதிக அளவில் ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்திய காபாடியா பாபாவுடன் யோகியார் அதிக நேரம் செலவளித்தார். மேலும் பல சாதுக்களுடன் ‘’கங்கா பரிக்கிரமா’’வினை கண்டு களிக்கும் வாய்ப்பும் நமது பகாவனுக்கு வாய்க்கப் பெற்றது.