என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

உள்ளுணர்வு மற்றும் துறவு (அ) உள்ளுணர்வு பெற்று துறவு மேற்கொள்ளுதல்

1952 ஆம் ஆண்டு யோகியார், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ ரமண மகிரிஷி போன்ற மஹான்களின் , மஹா நிர்வாண நிலை அடைதலை பற்றி அறிந்து கொள்ள நேர்ந்தது. உண்மையான பரம்பொருளை பற்றி அறிந்து கொள்ளும் தனது ஆன்மாவின் தேடலுக்கான பயணத்தை தொடங்கிய நமது யோகியார், கன்ஹாங்காட்டில் உள்ள ஆனந்த ஆசிரமத்தை அடைந்தார். அங்கு அவரது குரு அவருக்கு, ‘’ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம் ‘’ என்னும் ராம மந்திரத்தை உபதேசித்தார். ஒரு வாரக்காலத்திற்கு இவ்விஷேசமான ராம மந்திரத்தை தொடர்ச்சியாக உச்சரித்ததின் பலனாக ப்ராமணத்துவம், என்னும் உயரிய நிலை அடைந்தவர்களுடன் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பும் நமது யோகியாருக்கு கிடைக்கப்பெற்றது.