என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

ஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்

யோகிராம் சுரத்குமார் 1918ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள நார்தராவில் அவதரித்தார். ஆகையால் அவர் பக்தர்களில் சிலர், அவரது அவதார ஸ்தலமான நார்தராவிற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என விரும்பினர். ஏனெனில் கிருஷ்ணரின் அவதார ஸ்தலமான மதுரா போல , ராமரின் அவதார ஸ்தலமான அயோத்தியா போன்ற, அங்கீகாரத்தை யோகி அவதரித்த நார்தராவிற்கும் அளிக்க விரும்பி, கட்டப்பட்ட இந்த ஜென்மஸ்தலம், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ந்தேதி திறந்து வைக்கப்பட்டது. இறைவனின் நாம சங்கீர்த்தன மகிமைகளை பரவ செய்வதே இவ்விடம் உருவானதின் பிரதான நோக்கம் ஆகும். இப்போதும் பல பக்தர்கள் இங்கு இடை விடாத நாம பாராயணம் செய்வதை காண இயலும்.