என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

சன்னதி தெரு இல்லம்

பார்வை நேரம்: காலை 9.00 மணி - 12 மணி, மாலை 4.00 மணி - 7.00 மணி

மக்களில் வெகுசிலர் மட்டுமே யோகியிடம் இருந்த தெய்வத்தன்மையை உணரத்தொடங்கினர். இருப்பினும் அவர்களால் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே அவர்கள், அவரை அடிக்கடி தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அருகில், சன்னிதி தெருவில் அவர் வசிப்பதற்காக ஒரு வீட்டை வாங்கினார்கள். இவ்விதம் 1977ஆம் ஆண்டு வாங்கப்பட்ட வீட்டில் 1978ஆம் ஆண்டு முதல் தான் யோகியார் வசிக்க தொடங்கினார். அவர் அங்கு வசித்தப்படி தன் தந்தையின் பணியை 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ந்தேதி வரை தொடர்ந்தார்.

1977ஆம் முதல் 1980 வரை சன்னிதி தெருவிற்கான நுழைவாயில்.