என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

சுதாமா இல்லம்

பார்வை நேரம்: காலை 9.00 மணி - 12 மணி, மாலை 4.00 மணி - 7.00 மணி

யோகி ராம்சுரத்குமார் 1993ஆம் ஆண்டு நவம்பர் 22ந்தேதி முதல் 2000 ஆண்டு ஜூன் மாதம் 24 வரை தங்கி இருந்து, தனது தந்தையின் ப்ரபஞ்ச சம்பந்தமான பணிகள் மூலமாக அவ்விருப்பிடத்தை புனிதப்படுத்தினார்.

1993 ஆம் ஆண்டு இறுதியில் யோகியின் உடல் நலம் குன்ற தொடங்கியது. அப்போது தேவகி அம்மாள் யோகியை அருகில் உள்ள ‘’ சுதாமா இல்லத்தில்’’ தங்குமாறும் அப்போதுதான் அவர்களும் மற்றும் உள்ள சகோதரிகளும் யோகியை கவனித்துக்கொள்ள இயலும் , என வேண்டிக்கொண்டார். யோகியாரும், அவ்விடம் ஆசிரம பணிகள் நடைப்பெற்று வந்த இடத்திற்கு அருகிலேயே இருந்த காரணத்தால் தனது இறைவனின் அருளாட்சி பணிகளைத் தொடர ஏதுவான இடம் என்ற காரணத்தாலும், அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

சுதாமா இல்லம், 2009ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல், பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.