என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை

சுற்றி திரியும் துறவி

அதன் பின்னனியாக, 1952ஆம் ஆண்டு முதல் 1959 ஆண்டு வரை, ப்ராமணர்களுடன் எந்நேரமும் கால் நடையாகவே இந்தியா முழுவதும் ஆன்மீக யாத்திரையில் ஈடுபட்டு, இறுதியில் திருவண்ணாமலையை அடைந்தார். அப்போது அவரிடம் தங்குமிடமோ, உணவு மற்றும் இதர தேவைகளை பூர்த்திசெய்யும் பண வசதியோ இல்லை. அவரை புன்னை மரத்தின் அடியிலோ, இரயில்வே ப்ளாட்ஃபாரத்திலோ, இரவு நேரங்களில் பாத்திர கடைகளின் முன்னால் நீட்டி கொண்டிருக்கும் மரப்பலகை அடியிலோ படுத்து இருப்பதை காண இயலும். பெரும்பாலான நேரங்களில் திருவண்ணாமலையை சுற்றிய வண்ணம் இருப்பார்.